கரூர் மாவட்டம் நொய்யல் ஆற்று ஓரத்திலும், கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்திலும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.