சுகாதார சீர்கேடு

Update: 2024-08-04 12:00 GMT

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் இ.பி. காலனியில் சிறுவர் பூங்கா அருகில் உள்ள மின்மாற்றியின் அடியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் தூய்மை பணியாளர்களால் வீடு, வீடாக சேகரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் குப்பைகளுக்கு நடுவே சென்று சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்