சின்னாளப்பட்டியை அடுத்த பழைய சிலுக்குவார்பட்டி சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.