சுகாதார சீர்கேடு

Update: 2024-06-23 14:32 GMT

மதுரை மாநகர், தாசில்தார் நகர் முகவை தெருவின் புதிய வார்டு எண் 36 கிழக்கு பகுதியில் உள்ள காலி இடங்களில் சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதனால் அங்கு எலி மற்றும் பாம்புகள் அதிகளவில் ஊடுருவுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்