திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, தேவர் தெருவிற்கு செல்லும் வழியில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் தெருவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய குப்பை தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.