புதுச்சேரி - கடலூர் சாலை, ஆலை வீதி, உப்பளம் வீதி உள்பட நகரின் பல்வேறு வீதிகளில் நீண்ட நாட்களாக கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகளின் அகலம் குறைந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?