கண்ட கண்ட இடங்களில் எல்லாம் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டுங்கன்னு துப்புரவு ஊழியர்கள் ஊருக்கு ஊரா சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் ஆனால் கடலூர் சுங்கச்சாவடி சாலை, உண்ணாமலை செட்டிச்சாவடி சந்திப்பில் குப்பை போன்று குப்பை தொட்டி வீசப்பட்டுள்ளது. இதனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.