குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 11:36 GMT

பெரம்பலூர் நகர், எளம்பலூர் சாலையில் உள்ள ரெங்கா நகர் 7-வது தெரு பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அகற்றப்படாமல் சில நேரங்களில் தீ வைத்து கொளுத்தி விடுவதால் துர்நாற்றம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதற்கும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாலையோரத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து வருகிறது. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்