கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் மர்ம நபர்கள் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் ஓடை முழுவதையும் தற்போது குப்பைகள் ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டும் இடமாக ஓடை மாறிப்போனது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன் ஓடையையும் தூர்வார வேண்டும்.