பழனி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில், குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.