கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகர் முதல் குறுக்கு தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.