கோவையை அடுத்த சோமனூர் பஸ் நிலையம் அருகே நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சென்று வருகின்றனர். ஆனால், பாலத்தின் கீழ் பகுதியிலும், ஓரங்களிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் முனவர வேண்டும்.