புதுவையில் வீடுகள், கடைகளில் வெளியேற்றப்படும் குப்பைகளை சேகரிக்க சாலையோரம் ஆங்காங்கே இரும்பினால் ஆன குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவை சாலையிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. குப்பை தொட்டிகளை சாலையோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.