சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மேலபஜார் வீதியில் சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?