ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் கிராமத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். ஆனால் எந்தவித பணியும் தொடங்கப்படவில்லை. எனவே பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.