கரூர் மாவட்டம் தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல், புன்னம் சத்திரம், குப்பம், க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல் கடைகள், டீக்கடைகள், பலகாரகடைகள் பழக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.