குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செல்லும் சாலையில் குப்பை குவிந்துள்ளது. ஆயுத பூஜையில் சேகரமான குப்பைகளும், உழவர் சந்தையில் சேகரமான குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளது. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகளையும் இங்கே தான் கொண்டுவந்து கொட்டுகின்றனர். பி.என்.ரோட்டில் இருந்து உழவர் சந்தைக்கும், பிச்சம்பாளையம் பகுதிக்கும் செல்ல அதிகமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குப்பையில் கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார்,திருப்பூர்.
8987657332