பழனி அடிவாரம் பாலசமுத்திரம் சாலையோர பகுதியில் இளநீர் கூடுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. தற்போது பழனி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த கூடுகளில் தண்ணீர் தேங்குகிறது. அவ்வாறு தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் டெங்கு பரவல் உள்ள நிலையில் இதுபோன்று இளநீர் கூடுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் பழனிக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.