சுகாதாரக்கேடு

Update: 2023-08-13 17:46 GMT
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி நிலையம் அருகில் இருந்து திருச்செந்தூர்- தூத்துக்குடி இணைப்பு ரோட்டில் ஹசீன் நகருக்கு எதிரில் வரையிலும் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைக்கிடங்காக காட்சியளிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்