ஈரோடு நஞ்சனாபுரத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. உடனே ஊராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குப்பைகளை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்தனர். மேலும் அந்த இடத்தில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையைும் வைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிா்வாகத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.