கொசுத்தொல்லை தீர்க்கப்படுமா?
குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்க விடக்கூடாது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட வாய்புகள் உள்ளன என வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நல்லது தான். ஆனால் குமாரவலசு அய்யப்பன் கோவில் அருகேயும் தீயணைப்பு நிலையம் கீழ்புறமும், கமிட்டியார் தோட்டத்திலும் ஆண்டுக்கணக்காக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எப்போது சீரமைக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முத்துச்சாமி வெள்ளகோவில் 9842033779