குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-02 14:44 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் காலை நேரத்தில் வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கி செல்கின்றனர். மாலை நேரங்களில் பொதுமக்கள் குப்பைகள் தெருக்களில் கொட்டிவிடுகின்றனர். இதனால் சாலைகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலைகளில் மாலை நேரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்