குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் வாலிபாளையம் ஹார்வி சாலையில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகளை பொதுமக்கள் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் தரையில் கொட்டுகிறார்கள். தற்போது மழைக்காலமாக உள்ளதால் குப்பை குவிந்துள்ள இடத்தில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை தொட்டியில் குப்பையை கொட்டாமல் கீழே கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன் ரேஸ், திருப்பூர், 9791364007