சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2025-03-30 19:42 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோடு ஓரம் பல நாட்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்று வீசும்போதும், வாகனங்கள் வேகமாகச் செல்லும்போதும் குப்பைகள் பறந்து வந்து சாலையில் விழுகின்றன. சாலையோரம் குவிந்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காதர்பாட்ஷா, தூசி.

மேலும் செய்திகள்