பேரணாம்பட்டு மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்கள், காமராஜ்நகர், திரு.வி.க. நகர், ரஹமதாபாத் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் அரசு மருத்துவமனைக்கும், பஸ் நிலையத்துக்கும் செல்கிறார்கள். அந்த வழியில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் ஓரம் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் கழிவுப்பொருட்களை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் ஈக்கள், கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஷத்அர்ஷூ, பேரணாம்பட்டு.