அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் சீனிவாசாநகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. அந்தப் பகுதியில் வசிப்போர் வெளியேற்றும் குப்பைகளை சேகரிக்க ஊழியர்கள் யாரும் வருவது இல்லை. இதனால் பலர் தெருவிலேயே குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எங்கள் நகர் வழியாக செல்வோர் திறந்த வெளியில் மதுபானம் குடிக்கின்றனர். இதனால் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. எனவே எங்கள் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தினமும் சேகரிக்க வேண்டும். எங்கள் பகுதி மண் சாலையாக உள்ளது. தார் அல்லது செம்மண் சாலை அமைத்துத்தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
-சித்ரா, வடமாம்பாக்கம்.