வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கடம்பை ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் கீழே சிலர் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் தொட்டி அருகில் குப்பைக்கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.சுகுமாறன் சமூக ஆர்வலர், கடம்பை.