சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-11-02 17:37 GMT

திருப்பத்தூர் அருகே செவ்வாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. மேலும் குப்பைகளை சேகரித்துச் செல்ல ஊராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் யாரும் வராததால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் குவித்து வைக்கின்றனர். ஒருசில நேரத்தில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, செவ்வாத்தூர்.

மேலும் செய்திகள்