சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-05-18 20:44 GMT

வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு வரும் மாடுகள், பன்றிகள் குப்பைகளை கிளறி விடுகின்றன. மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள், அருகில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் குப்பைகளை கொட்ட தடை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியன், அப்துல்லாபுரம். 

மேலும் செய்திகள்