அணைக்கட்டு தாலுகா பொய்கை பாலாற்றில் பொய்கை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்காமல் அருகில் உள்ள பாலாற்றில் குவியலாகக் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் நச்சுக்காற்று பரவி மாசு ஏற்படுகிறது. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுகிறது. குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.