குடியாத்தம் தலைமை தபால் நிலையம் அருகில் காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம், வனத்துறைக்குச் சொந்தமான கன்னி தோப்பு எதிரில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை அவ்வப்போது தீவைத்து எரிக்கின்றனர். இது சுற்றுச்சூழல் மாசுபடுத்துகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகள் ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும்.