ஓச்சேரியில் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் வசிப்பவர்கள் குப்பைகளை குளத்தில் கொட்டி மாசுப்படுத்துகிறார்கள். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குளத்தில் விடுகிறார்கள். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கோவில் குளத்தில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் விடுவதையும் தடுக்க வேண்டும்.
-லிங்கேஷ், ஓச்சேரி.