சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகளை முறையாக தூர்வாராததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குப்பை தொட்டிகளின் அருகே குப்பைகள் குவியலாக கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.