கோபி அருகே உள்ள கரட்டூர் பிரிவில் இருந்து செல்லும் பாரியூர் ரோட்டில் 6 இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் குப்பை தூசிகள் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.