செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வெளிவட்ட சாலையில் (அவுட்டர் ரிங் சாலை) பாலம் அருகே ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகள் தினமும் சாலை அருகிலேயே எரிக்கப்படுவதால் காற்று மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.