திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செந்நீர்குப்பம் கண்ணகி தெருவில் குப்பைத் தொட்டி இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி செல்வது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக இந்த தெருவில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.