கூடலூர் லோயர்கேம்பை அடுத்த தமிழக வனப்பகுதியில் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகளை வனவிலங்குகள் தின்னும் அபாயம் உள்ளது. அதன்மூலம் வனவிலங்குகள் இறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.