தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிபேட்டை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் தண்டவாளப்பகுதியை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை பராமரிப்பின்றி இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகளை சுரங்கப்பாதையில் கொட்டுகின்றனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில் அறிவிப்பு பலகைகள் அமைத்து பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், சத்யா நகர், தர்மபுரி.
-கணேசன், சத்யா நகர், தர்மபுரி.