சாலையோரம் கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-08-20 15:14 GMT
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் இருந்து குயின்ஸ் ரோடு செல்லும் சாலையில் இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அங்கு மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. அந்த கழிவுகள் சாலை முழுவதும் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்