தொற்றுநோய் அபாயம்

Update: 2022-08-19 15:12 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கொங்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சாலையை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்