திண்டுக்கல் மேற்கு ரத வீதியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?