கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் பகுதியில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடம் அருகே பாதசாரிகள் செல்லும் நடைபாதையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.