குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-17 13:08 GMT
கோவை வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு எதிரே சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன இதன் அருகே தான் மாநகராட்சி பள்ளி உள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்