திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் ஜவுளி மார்க்கெட் எதிரே அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொத்தமாக கொட்டி வைத்துள்ளனர். இதனை நகராட்சி சார்பில் அகற்றவில்லை. இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை தெரு நாய்கள் கிளறி விடுவதால் அப்பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. எனவே சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்.