நிரம்பி வழியும் குப்பைகள்

Update: 2022-08-16 10:47 GMT
திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அய்யங்குளம் அருகே 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த 2 தொட்டிகளும் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் குப்பை தொட்டிகளில் குப்பையை போட முடியாததால் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்