தேங்கும் குப்பைகளால் துர்நாற்றம்
பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டிற்குட்பட்ட சிதம்பரனார் வீதியில் கடைகள் அதிகமாக உள்ளது. இந்த கடைகளில் சேகரமாகும் குப்பைகள், கழிவுகள் இங்கு ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட பல்லடம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ராஜா,பல்லடம்.
96290 32328