குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-12 14:11 GMT

சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காட்டில் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறத்தில் குப்பை கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. அருகில் 2 ரேஷன் கடைகளும், குடியிருப்புகளும் உள்ளன. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் பன்றிகள் மேய்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சாமுவேல், சேலம்.

மேலும் செய்திகள்