திருக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே பொதுமக்கள் கொட்டக்கூடிய குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதனால் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.