பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே அடிக்கடி குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிப்பதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். எனவே, வடக்கிபாளையம் ரோட்டில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.