பெங்களூரு சங்கராபுரா கவிலட்சுமிஷா பகுதியில் ஜெயின் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அந்த சாலை ஓரத்தில் குப்பை, கழிவு பொருட்களை வீசி செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.